காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சி. பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. பு. விஜயகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் திரு. பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.