உத்திரமேரூரில் குட்கா வழக்கில் 4 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் பழவேரி கிராமத்தில், பத்மநாபன் என்பவரின் பெட்டிக்கடையில் 10 பாக்கெட் குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திருக்கச்சூரில் உள்ள சம்சுதீன் என்பவரின் மளிகை கடையில் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சம்சுதீன் கடையில் சோதனை செய்தபோது, 289 கிலோ குட்கா பொருட்கள், ஒரு டாடா ஏஸ் வேன், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்மநாபன், சம்சுதீன் மற்றும் அவரிடம் வேலை செய்த சாதிக் பாஷா, சையது அப்தாஹிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி