செங்கல்பட்டு: 2000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகுந்தகிரி, இந்தளூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இதில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டன. 

இதனால் இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாயின. இதை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் குடோனுக்கு எடுத்துச் செல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன. உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி