செங்கல்பட்டு: மதுபானக் கடை.. 2 வது நாளாக பெண்கள் முற்றுகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பழவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று (ஜூன் 1) இரண்டாவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடை திறக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி