செங்கல்பட்டு: லிஃப்ட் கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலி

செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூரைச் சேர்ந்த சசிகலா (40), திருப்போரூர் செல்ல திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி