செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வருகை புரிந்தனர். அவர்கள் அங்கு தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரை விளக்கம், கிருஷ்ண மண்டபம், அர்ஜூனன் தபசு போன்ற புராதன சின்னங்களை பார்வையிட்டு அதன் பாதுகாப்பு தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதில் திருக்கழுக்குன்றம் தாசில்தார் தேவேந்திரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், சுற்றுலா வழிகாட்டி மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.