காஞ்சி சங்கர மடத்தில் நுால் வெளியீடு விஜயேந்திரர் விருது

காஞ்சி காமகோடி பீடத்தின் சமய, சமுதாய, கலை, கலாசார பண்பாண்டு சேவை அமைப்பான, இந்து சமய மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், நேற்று, காலை 9: 30 மணிக்கு மஹா சுவாமிகள் கலையரங்கில் காஞ்சி க்ஷேத்ர கலாமந்திர் குழுவினரின் காஞ்சிபுரம் பாணி நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. இதில், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமயப்பணிகள் என்ற தலைப்பில், சென்னை ஆய்வறிஞர் புலவர் வே. மகாதேவன், சமுதாயப்பணிகள் என்ற தலைப்பில், சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடசன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர்.

மாலை 6: 00 மணிக்கு, புலவர் வே. மகாதேவன் எழுதிய 'சேக்கிழார் சொன்னதும் சொல்லாததும், அகத்தியர் அகராதி' ஆகிய இரு நுால்களை காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியிட்டார். தொடர்ந்து, சமுதாய பணியாற்றி வரும் சேவை அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருது வழங்கினார்.

இதில், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம், நவநீதகிருஷ்ணன் பஜனை சபா, ஆனந்த கிருஷ்ணன் பஜனை குழு, பசுமை இந்தியா அறக்கட்டளை, காஞ்சி அன்னசத்திரம்.

சர்வம் அறக்கட்டளை, விழுதுகள் அமைப்பு, யங் இந்தியா, காஞ்சி நகர வரவேற்பு குழு, காஞ்சி சங்கரமடம் வரவேற்பு குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், 'இருள் நீக்கி' விருது வழங்கினார்.

தொடர்புடைய செய்தி