தவெக சார்பில் வெற்றி பெற்றவர்களிடம் விஜய் ஆலோசனை

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட 106 பேர் சான்றிதழுடன் இன்று (மே. 5) வருகை புரிந்தனர். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, விஜய் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அனைவரும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மே 7ம் தேதி தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற மதர் பதுருதீன் (எ) முஸ்தபா வட இந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

தொடர்புடைய செய்தி