செங்கல்பட்டு மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், கஞ்சா, மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலம் மார்ச் 7, 2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பின்புறம் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 3, 2026 அன்று மாலை 5 மணி வரை ரூ. 1000/- நுழைவு கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18% சரக்கு மற்றும் சேவை வரியையும் உடனடியாக செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி