சோழிங்கநல்லூர்: ரூ.1 கோடி கடன்.. 4 பேர் தற்கொலை முயற்சி?

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை உரிமையாளர் பாலாஜி (35) தனது மனைவி பிரியா (30), தந்தை சீனிவாசன் (60), தாய் பத்மாவதி (55) ஆகியோருடன் வியாபார நஷ்டம் மற்றும் ஒரு கோடி ரூபாய் கடன் காரணமாக குடும்பத்துடன் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தில், கடை ஊழியர் அமுதா வந்து பார்த்து அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்ததால், அவர்கள் சுயநினைவுக்கு வந்து உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி