காஞ்சி மருதத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் திருத்தேர் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மருதம் கிராமத்தில் கிராம மக்கள் குலதெய்வமாக வழிபடும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இன்று அக்கிராமத்தில் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு எல்லையம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. 

அதைத்தொடர்ந்து, எல்லையம்மன் திருத்தேரில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேர் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து சென்றனர். அப்போது, வழிநெடுகிலும் கிராம மக்கள் தேங்காய் உடைத்தும் சூடம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். திருத்தேர் முன்பாக, விரதமிருந்த பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கட்டை கால் நடனம் ஆடியும், டிராக்டரில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்று நேர்த்தியுடன் செலுத்தினார்கள். அதேபோல், எல்லையம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு பொங்கல் படையல் இட்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி