திருப்போரூர்: பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், கே. ஏ. டி. அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று (மே. 31) கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்போரூர் தவெக எம்எல்ஏ விஜயராஜ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தவெக மாவட்ட செயலாளர் தீனா, அறக்கட்டளை நிர்வாகிகள் அன்பு, தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி