திருக்கழுக்குன்றம் 100 ஆண்டு வாரச் சந்தை மீண்டும் தொடங்கியது

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட முத்திகை நல்லான்குப்பம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை, ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகளுடன் புதுப் பொலிவுடன் நேற்று (ஜூன். 2) செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. விவசாய கருவிகள், மீன், கருவாடு, காய்கறிகள் மற்றும் மாடு விற்பனை நடைபெற்ற இந்த சந்தையில், பல்லாவரம் வெள்ளிக்கிழமை வியாபாரிகள் பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி