தவெக தொண்டர் அணி தலைவர் பகிரங்க பேச்சு.. இணையத்தில் வைரல்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடிக்கம்பம் அமைத்தல் கொடியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் தலைமையில் செங்கல்பட்டு நகரத்தில் ஏழு இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது

அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர் அணி தலைவர் எம். எஸ் பாலாஜி அவர்கள் பேசுகையில் எதிர்க்க வந்து நின்னு சண்டை போடு, பின்னால் சுரண்டுவது, ஆட்களை ஏவி விடுவது இந்த மாதிரி சீன் எல்லாம் வேறு யார்கிட்டயாவது வச்சுக்கோ இது தமிழக வெற்றிக் கழகம் எனவும், எங்க கிட்ட பேச்சே இருக்காது ஒன்லி ஆக்சன் தான் என பேசியுள்ளார். அந்த காட்சியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி