கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று (மே. 26) நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செட்டிநாடு & எஸ். ஆர். எம். , மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் பங்கேற்று செங்கல்பட்டு மாவட்ட மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி