அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி ஊர்வலம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மதுராந்தகத்தில் நகரத் தலைவர் லோகோ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் நேருஜி கலந்து கொண்டு இந்த மௌன அஞ்சலி அமைதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இந்த மௌன அஞ்சலி அமைதி ஊர்வலம் மதுராந்தகம் நகர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த மௌன அஞ்சலி அமைதி ஊர்வலத்தில் கருங்குழி பேரூர் தலைவர் முகமது ஜாவித், மாவட்ட துணைத் தலைவர் கிறிஸ்டோபர்ஜெயபால், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணன், கெங்காதுரை, சத்தியசீலன், வேல்விழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.