கூழாங்கல்சேரி குளத்தை சீரமைக்க வேண்டுகோள்

காஞ்சிபுரம் மாவட்டம் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி எதிரே, பொதுக்குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்பகுதியினர், 20 ஆண்டுகளுக்கு முன், இந்தக் குளத்தின் நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், குளம் முழுவதும் பாசிப் படர்ந்து, குளத்தின் நீர் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. 

மேலும், இரவு நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்துவோர், காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை குளத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், குளம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் நிரம்பி உள்ளது. எனவே, குளத்தைத் துப்புரவு செய்து சீரமைத்து, பாதுகாக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி