கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளில் கிணறு, 'போர்வெல்' ஆகியவற்றுக்கு நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதிலும், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடித்து குளத்தில் நீராடி, கந்த பெருமானை வழிபட்டு செல்கின்றனர். குளத்தின் கிழக்கு பகுதியிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், குளத்தின் மேற்கு பகுதி, தெற்கு பகுதி, வடக்கு ஒரு பகுதியில், பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீரில் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, குளத்தில் விடுபட்ட பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.