புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவிக்கு அதிமுகவில் பதவி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய கல்பாக்கம் - புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவியான காயத்ரி தனபாலுக்கு அதிமுகவில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே. 14) இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பொறுப்பில் ஏற்கனவே மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் இருந்தார்.

தொடர்புடைய செய்தி