செங்கல்பட்டு: வெள்ளத்தில் சிக்கிய மினி பஸ்..வீடியோ

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி வழியாக 7000 கன அடி தண்ணீர் தற்போது கிளியாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 13) 50 பயணிகளுடன் தச்சூரிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சகாய நகர் அருகே கிளி ஆற்றில் சிக்கியது. இன்று (டிசம்பர் 14) இரண்டாவது நாளாக தண்ணீர் வடியாத நிலையில் பேருந்து மீட்கப்படாமல் கிளியாற்றில் சிக்கி உள்ளது. மேலும் தண்ணீர் குறைந்தால் மட்டுமே பேருந்தை நெருங்க முடியும், மீட்பு பணியை துவங்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி