பூந்தமல்லி: பேருந்தில் தவறவிட்ட நகை பையை மீட்டு கொடுத்த போலீசார்

பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் பகுதியைச் சேர்ந்த மரிய பிரம்மி (36) என்பவர் நேற்று (மே 20) ஶ்ரீபெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, செங்கல்பட்டில் இறங்கும் போது 5 சவரன் நகை வைத்திருந்த கைப்பையை பேருந்தில் தவறவிட்டுள்ளார். இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறை உடனடியாக பேருந்து ஓட்டுநரைத் தொடர்புகொண்டு கைப்பையை மீட்டு, மாற்றுப் பேருந்தில் நடத்துநர் மூலம் மரிய பிரம்மிக்கு ஒப்படைக்க ஏற்பாடு செய்தது.

தொடர்புடைய செய்தி