பெருங்களத்தூர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பிளஸ் 2 மாணவி சாதனை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது நிஷா, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உலகின் ஏழு கண்டங்களில் உள்ள நான்கு சிகரங்களில் ஏறியுள்ள இவர், தற்போது குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி