விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் தொல். திருமாவளவன் கொள்கைகளை மழுங்கடிக்க முற்படுவது முரண்பாட்டின் உச்சம் என்று கூறியுள்ளார். கொண்ட கொள்கையிலும் எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி செயல்படும் தலைமையின் கீழ் பயணிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.