செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் - அபிராமி தம்பதியரின் இரட்டையர்களான யாழ் முகிலன் மற்றும் யாழினி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 419/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மே 20 அன்று வெளியான தேர்வு முடிவுகள் இவர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது இந்தச் சாதனையைத் தொடர்ந்து உறவினர்களும் பள்ளி நண்பர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.