திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது, அதில் இருந்த ஆக்சிஜன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.