இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டங்களில் அவ்வப்போது சலசலப்பும் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளை புறக்கணிப்பதாகவும் கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தங்கள் பகுதிகளிலும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் இருந்ததால் மாமன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், திமுக மண்டல குழு தலைவர்கள் இரண்டு பேர், திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட 35 மாமன்ற உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தற்போதைய மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாமன்ற கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.