அதன் பேரில் தற்பொழுது இந்த தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலை பராமரிக்கும் பணி தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவேலம்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லக்கூடிய வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகன நெரிசலால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.