கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், புதிதாக தொழிற்சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக, ஜெல்லி கற்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து, ஜெல்லி கற்கள் சரிந்து, சாலை முழுதும் சிதறி உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள ஜெல்லியின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அளவுக்கு அதிகமாக ஜெல்லி கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் சிதறியுள்ள ஜெல்லி குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.