திருப்பெரும்புதூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி. கருணாநிதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருப்பெரும்புதூர் ஒன்றியம் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு மாண்புமிகு குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி. கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், நகரமன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மாலதி டான் போஸ்கோ, கணேஷ்பாபு, பரமசிவன், அரிகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் பாலா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.