மதுராந்தகம்: மரகதம் குமரவேல் படத்தை துடைப்பத்தால் அடித்து கிழிப்பு

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் நேற்று (மே. 26) மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மரகதம் குமரவேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவரது படத்தை துடைப்பத்தால் அடித்து கிழித்து எரித்தனர்.

தொடர்புடைய செய்தி