தீ விபத்திலிருந்து தப்பிய மாமல்லபுரம் கடற்கரை கோயில்

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் உள்ள பல்லவர் கால கடற்கரை கோயிலைச் சுற்றி கடல் நீர் சூழாமல் தடுக்க பாறை கற்கள் மற்றும் காற்று பாதிப்பை தவிர்க்க சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 2:00 மணியளவில், தரையில் குவிந்திருந்த சவுக்கு சருகுகளில் மர்ம நபரால் தீப்பற்ற வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கோயில் பகுதிக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி