செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் நேற்று முன்தினம் (மே. 25) தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது கணவரும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான குமரவேல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், குமரவேலுடன் கழக உடன்பிறப்புகள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.