ரூ. 80 லட்சம் மதிப்பில் காஞ்சான்குட்டை சீரமைப்பு

கேளம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாத்தங்குப்பம் பகுதியில் 15 ஆண்டுகளாக கழிவுநீர் மற்றும் குப்பைகளால் நிரம்பி துர்நாற்றம் வீசிய காஞ்சான்குட்டை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, குட்டையைச் சுற்றி தடுப்பு வேலி, சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபாதை, மூடு கால்வாய் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி