காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகக் கட்டிடங்கள், வங்கிகள் உள்ளன. இப்பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்கி வழிந்தோடுகிறது. இதனால், அடிப்படை தேவைகளுக்காக தினமும் வந்து செல்லும் மக்களும், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் வாலிபர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த அவல நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.