தாம்பரம் மாநகராட்சிக்கு புதியவாகனம்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கன்னடபாளையம் பகுதியில் உள்ள குடோனில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இப்பகுதி மக்கள் துர்நாற்றம் வீசுவதாக குப்பை கிடங்கை மாற்றக் கோரி வந்தனர். இதற்கு தீர்வாக, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, நவீன கம்ப்ரசர் இயந்திரம் கொண்ட, முற்றிலும் மூடப்பட்ட குப்பை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும்போது துர்நாற்றம் வீசுவது மற்றும் குப்பைகள் காற்றில் பறந்து விழுவது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி