செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எல். எண்டத்தூர், ராமாபுரம் ஆகிய இரு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருந்துகள் பதப்படுத்தி வைப்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குளிர்சாதன பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் ஜீ. தம்பு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் டி. ஆர். நாராயணன், கருணாகரன், கலியுக்கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.