செங்கல்பட்டில் ரத்த தான முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை ஒட்டி உறுதிமொழி மற்றும் 50 முறைக்கு மேல் ரத்ததானம் அளித்த உதவும் கரங்கள் சரவணனுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் உலக ரத்ததான தினத்தை ஒட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், உறுதிமொழி ஏற்பு மற்றும் 50 முறைக்கு மேல் ரத்ததானம் அளித்த கொடையாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் சார் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை உதவும் கரங்கள் சரவணன் காலத்தி மணிகண்டன் குணசேகரன் விஷ்வா இவர்களுக்கு வழங்கினார்கள். மேலும் ரத்ததானம் வழங்கிய மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் அரசு, துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார், ரத்ததான கொடையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி