செங்கல்பட்டு: பணி நியமன ஆணைகள் வழங்கிய கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 55 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 125 ஆண்கள், 102 பெண்கள், 2 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், 13 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் என மொத்தம் 32 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி