தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் டாஸ்மார்க் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், மது வாங்குபவர்களுக்கு பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டும் செங்கல்பட்டு பகுதியில், கூடுதலாக மது பாட்டில் வைத்து பணம் வசூலிப்பது தொடர்ந்து வருவதாக மது பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில், பீர் வாங்க வந்த மது பிரியரிடம் ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மதுப்பிரியர் மற்றும் கடை ஊழியர் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.