செங்கை: இரு மீனவர் குப்பங்களுக்கிடையே மோதல்

இன்று காலை புதுப்பட்டினம் கடை வீதிக்குச் சென்று திரும்பிய உய்யாலிகுப்பம் இளைஞர் கோகுலை, புதுப்பட்டினம் இளைஞர் ஆகாஷ் தாக்கியதால் ஆத்திரமடைந்த உய்யாலிகுப்ப மீனவர்கள், புதுப்பட்டினம் மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், புதுப்பட்டினம் மீனவர்கள் உய்யாலிகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி