சென்னை: முந்திரி சாப்பிட்டதால் குழந்தை பலி; பரிதாபம்

எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் சிவகுமார்-அருணா தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி, நேற்று இரவு வீட்டில் சகோதரியுடன் முந்திரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதிகப்படியான முந்திரி சாப்பிட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி