சென்னை: புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் 5, 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமேடை மாற்றப்படுவதால், ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில் மாற்றம் இருக்கும். இதனால், மேற்கண்ட 45 நாட்களுக்கு மட்டும் தற்காலிக ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் செல்லும் ரயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி