செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சந்துரு (27) என்ற இளைஞர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த இவர், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும்போது, சிங்கப்பெருமாள்கோவில் - திருத்தேரி ரயில் நிலைய கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.