செங்கல்பட்டு: தாய் இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவி

வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ்-கற்பகம் தம்பதியினரின் மகள் மனுஸ்ரீ (17). இவர் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தாயார் கற்பகம் உடல்நலக்குறைவால் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அரசு அறிவித்திருந்த பொதுத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை, தாய் இறந்த துயரத்திலும் உறவினர் உதவியுடன் மதுராந்தகம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்கு வந்து எழுதினார்.

தொடர்புடைய செய்தி