தமிழக அரசு நேற்று (பிப்ரவரி 24) 8 மாவட்டங்களில் ஆட்சியர் மாற்றங்களை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா ஐஏஎஸ் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, திருமதி. எஸ். மாலதி ஹெலன், இ. ஆ. ப. , செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.