தொடர்ந்து தனது கடைக்கு வந்த தினேஷ் உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு ஷட்டரின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், உதிரி பாகங்கள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அடுத்தடுத்து இரண்டு துணிக்கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. களஞ்சியம் என்கிற துணிக்கடையில் 5000 ரூபாய் பணமும் துணிகளும் திருடுபோய் உள்ளது.
மேலும் சோபிகா எனும் துணிக்கடையில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், துணிகளும் திருடு போய் உள்ளது. தொடர்ந்து கடை உரிமையாளர்கள் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.