இங்கு, மறைமலை நகரில் தற்காலிக நிழற்குடையை ஒட்டி, பேருந்துகள் நின்று செல்ல தனியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அனைத்து பேருந்துகளும், நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. அதேபோல், மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும், பயணியர் நிழற்குடையில் நிறுத்தப்படுவதில்லை.
சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்வதால், மறைமலை நகர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் போன்ற பகுதிகளில், பயணியர் நிழற்குடைகள் உள்ள பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி சென்றால், விபத்துகள் தவிர்க்கப்படுவதோடு, பயணியருக்கும் சிரமம் ஏற்படாது என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.