உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினர்

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 28 அன்று பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதல்வர் விஜய், தவெக நிர்வாகிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ய அறிவுறுத்தினார். அதன் விளைவாக, செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று (மே 28) நான்காவது ஆண்டாக அன்னதானம் வழங்கினர். செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி