மதுராந்தகத்தில் கலையரங்கம் திறந்து வைத்த அதிமுக எம்எல்ஏ

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மூன்று கலையரங்கங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குபுத்தூர், விண்ணம்பூண்டி, பொற்பணங்கரணை இப்பகுதிகளில் கலையரங்கங்கள் கட்ட வேண்டுமென பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின் பேரில் அப்பகுதி கிராம மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு கலையரங்கத்திற்கும் 7.70 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 21.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கங்களை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சரபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து குத்து விளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி கலையரங்கங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். 

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி