காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலூர் பகுதியைச் சேர்ந்த குப்பன் பீமன் என்பவரது மகன் சக்திவேல். 30. இவர் கடந்த 15ம் தேதி, கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில், 'பைக்'கில் சென்றார். அப்போது, மேல்கால்வாய் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது பின்புறத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்குள்ளோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வழியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சக்திவேல் சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார். இதுகுறித்து, காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.